காதல் படுத்தும் பாடு

“இயேசுவைக் கும்பிடாத எத்தனையோ ஊருங்க இருக்கு.
இந்து மதத்தைப் பத்தி தெரியாத எத்தனையோ நாடுங்க இருக்கு.
அல்லாவைக் கும்பிடாத எத்தனையோ ஜனங்க இருக்கிறாங்க.
ஏன்? கடவுளே இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட இருக்கு.
ஆனால் காதல் இல்லாத இடமே இல்லை.
காக்கா குருவிக்கிட்ட கூட காதல் இருக்கு.ஆனா மதம்ங்கிறது மனுஷன்கிட்ட மட்டும்தான் இருக்கு.”

நல்லாதானடா இருந்த. திடீர்னு என்னடா ஆச்சு உனக்கு? என்ன கண்றாவி இதுன்னு கேக்கறீங்களா. வேற ஒண்ணுமில்லை. நேத்து நைட் தெரியாத்தனமா பூவே உனக்காக படத்துல ஒரு சீன் பார்த்துட்டேன். அதுல வர்ற டயலாக்தான் இது. இதாவாது பரவாயில்லை. க்ளைமாக்ஸ்ல அண்ணன் பேசுவாருங்க பாரு டயலாக்…….

அஞ்சு: So, காதல்ல தோத்துட்டா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது அப்படித்தானே? (எவன் சொன்னது. அப்படி பார்த்தா ஊர்ல ஒரு பயலுக்குக் கண்ணாலம் ஆகாது.)

விஜய்: தோக்கிறதுக்கு இது ஒண்ணும் பரிட்சை இல்லைங்க. அது ஒரு ஃபீலிங். அந்த ஃபீலிங் ஒரு முறை வந்துட்டா, வாழ்நாள் முழுக்க மறையாது. (என்ன ஃபீஈஈஈஈஈலிங்… நீ முதல்ல எட்டாவது பரிட்சையை ஒழுங்கா எழுதி பாஸ் பண்ணியா? என்னமோ IAS, IPS பரிட்சை ரேஞ்சுக்கு பில்டப் உடற)

அஞ்சு: ஆனால் காதல்ல தோத்தவங்க எத்தனையோ பேரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கறதில்லையா? (அவனுங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதே காதல்ல தோத்ததாலதான். ஜெயிச்சிருந்தாங்கன்னா சேது விக்ரம் மாதிரி ஏர்வாடியிலதான் திரிஞ்சிருப்பானுங்க.)

விஜய்: இருக்காங்க. ஆனா, அவங்க சந்தோஷமாதான் இருக்காங்கன்னு, உங்களிற்குத் தெரியுமா? எங்க அவங்க நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்க்கலாம். அவங்க மனசுல அந்த பழைய காதல் இல்லைன்னு. முடியாதுங்க. எத்தனை வருஷம் ஆனாலும்,எங்கோ ஒரு மூலைல, அவங்க நெஞ்சுல அந்த பழைய்ய காதல் இருந்துக்கிட்டுதான் இருக்கும். (அதுக்கு பேருதான் சனி மூலைங்கிறது. பின்ன மறக்க முடியுமா? எதிர்த்த வீட்டு ராதிகா கிட்ட செருப்படி வாங்கினது. பக்கத்து வீட்டு செல்விக்கிட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டு வாங்கினதை எல்லாம் மறக்க முடியுமா?)

அஞ்சு: ஒரு செடியில ஒரு பூ உதிர்ந்துட்டா அந்த செடியில இன்னொரு பூ பூக்கறதில்லையா? அது மாதிரிதான இதுவும். (இப்ப நீ என்ன கேக்க வர்ற.
தெளிவா கேளு. சும்மா செடி, பூ, கத்திரிக்காய்ன்னுட்டு)

விஜய்: வாஸ்தவம்தாங்க. ஆனா விழுந்த பூவை எடுத்து மறுபடி அந்த செடியில உங்களால ஒட்ட வெக்க முடியுமா? முடியாதுங்க. சில பேருக்கு அது செடி மாதிரி. சில பேருக்கு அது பூ மாதிரி. (சுத்தம்… அதுக்கு அந்த புள்ளை கேட்டதே பரவாயில்லை. கொஞ்சமாவது புரிஞ்சுது. நீ நேராவா எதையும் பேச மாட்டியா)

அஞ்சு: இதுதான் உங்க முடிவா? (அடிப்பாவி….இவ்வளவு நேரமா இந்த கண்றாவியைத்தான சொல்லிட்டிருந்தேன்)

விஜய்: இல்லை. இதுதான் என் பதில். (டேய் ரெண்டுமே ஒண்ணுதாண்டா. என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு)

ஹி ஹி. ரொம்ப நாளா மொக்கைப் பதிவு போடணும்னு ஒரு ஆசை அதான். ஹி ஹி ஹி.

டேய் அப்போ இதுக்கு முன்னாடி போட்டதெல்லாம் ரொம்ப நல்ல பதிவுன்னு நினைச்சுட்டிருக்கியா? எல்லாமே மொக்கைதாண்டான்னு யாரும் சொல்லக் கூடாது. அது எனக்கே தெரியும்…

மொக்கை இல் பதிவிடப்பட்டது . 63 மறுமொழிகள் »

63 பதில்கள் “காதல் படுத்தும் பாடு” க்கு;

  1. தம்பி Says:

    சூப்பர்!!
    இப்படியே பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள். விக்ரமன் படம் அத்தனையும் பாத்தீங்கன்னா நூறு பதிவு போட ஐடியா கிடைக்கும். டாம் க்ரூச கூட டப்பா கேரக்டர்ல நடிக்க வைக்கிற திறமை அவர்கிட்ட இருக்கு.

  2. நந்தா Says:

    வாங்க தம்பி. எங்க மொக்கை நடந்தாலும், நீங்க அங்க இருக்கீங்க.

    //இப்படியே பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள்.// ஆஹா. ஒரு க்ரூப்பாத்தான்யா திரியறாங்க.

  3. சங்கீதா Says:

    அடப்பாவி, உனக்கெல்லாம் நானே அதிகம். ஆனாலும் நீ பேசற பேச்சு ஓவருதான்.

  4. சார்லி Says:

    அடப்பாவி என்னைப் போய் டிக்கெட் எடுத்து வைன்னு அனுப்பிட்டு, நீ இங்க வந்து அஞ்சு அரவிந்த் கூட கடலை போட்டுட்டு இருக்கியா? உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.

  5. மீசை தாத்தா Says:

    நீ கல்யாணம் பண்ணு. பண்ணாத. என்னமோ பண்ணிக்க. மரியாதையா போறதுக்கு முன்னாடி எனக்குத் தரவேண்டிய வாடகை பாக்கியைக் கொடுத்துட்டு போயிடு.

  6. மளிகை கடைகாரர் Says:

    அப்படியே எனக்குத் தர வேண்டிய மளிகை பாக்கியையும் தந்திட்டுப் போயிடுங்க. இல்லைன்னா விட மாட்டேன்.

  7. சார்லி Says:

    டேய் வந்திருடா, இன்னும் பால்காரன், காய்கறிகாரன் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி இடத்தை காலி பண்ணிடலாம்.

  8. பக்கத்து வீட்டு பையன் Says:

    மாமா என்கிட்ட நேத்து வாங்கின 50 காசு கொடுத்திட்டு போயிடு மாமா. இல்லைன்னா அம்மா அடிப்பா மாமா.

  9. விஜய் Says:

    நான் வேணா சங்கீதாவையே கல்யாணம் பண்ணிக்கறனே.

  10. சங்கீதா Says:

    தேவையே இல்லை.என்னமோ பெரிய இவன் மாதிரி பேசுன.

    அப்படியே மீறி பண்ணிக்கறதா இருந்தாலும், முதல்ல இவனுங்க கடனை எல்லாம் அடைச்சிட்டு வா.அப்புறம் யோசிக்கறேன்.

  11. விஜய் Says:

    அஞ்சு அஞ்சு நீயாவது ரெக்கமண்ட் பண்ணு அஞ்சு. தெரியாம சீன் விட்டுட்டேன். ப்ளீஸ் அஞ்சு.

  12. அஞ்சு அர்விந்த் Says:

    முதல்ல நீ என்கிட்ட வாங்கின 500 ரூபாய் கடனை திருப்பி கொடு. அப்புறம் பார்க்கலாம்.

  13. விஜய் Says:

    ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ………

    டொண்டொடடொடடொட டொய்ங். டொண்டொடடொடடொட டொய்ங்.

    உன்பேரை சொல்லும் ரோசாப்பூ.

    டொண்டொடடொடடொட டொய்ங். டொண்டொடடொடடொட டொய்ங்.

  14. விக்ரமன் Says:

    டேய் அறிவுகெட்டவனே. அது சரத்குமார் படம்டா. சூரிய வம்சம். இது பூவே உனக்காக. இந்த படத்துக்கு வேற பாட்டுடா……

  15. நந்தா Says:

    டேய் யாருடா நீங்க எல்லாம்?????

  16. விஜய் Says:

    அப்படியா சரி.

    சொல்லாமலே…….
    யார் பார்த்தது……..
    நெஞ்சோடுதான்……..
    பூ பூத்தது……..

  17. சங்கீதா Says:

    யேய் நிறுத்து இப்போ எதுக்கு தேவையே இல்லாம இந்த பாட்டு பாடற?

  18. விஜய் Says:

    ஈஈஈஈஈ. ஒரு சோக அட்மாஸ்பியரை க்ரியேட் பண்ணிட்டு அது மூலமா எஸ்கேப் ஆய்டலாம்னுதான்.

  19. பொன்ஸ்~~Poorna Says:

    :) ))) – பதிவுக்கு இல்ல.. பின்னூட்டங்களுக்கு … ;)

  20. லக்ஷ்மி Says:

    நந்தா, பொன்ஸ் சொன்னாப்போல பின்னூட்டங்கள் கலக்கலா இருக்கு.. உக்காந்து யோசிச்சிருக்காங்க பாருங்களேன்…. :)

  21. நந்தா Says:

    ஆமாம் ல்க்ஷ்மி. ரூம் போட்டு யோசிப்பானுங்க போல இருக்கு. பாசக்கார பசங்க.

  22. வெங்கட்ராமன் Says:

    யாரோ : பந்தி போட்டாச்சு சாப்புட வற்றவங்க வரலாம் . . . . .

    அஞ்சு அரவிந் : விஜய் விஜய் எங்க திடீர்னு காணாம போயிட்டீங்க. நல்லா தானே டயலாக் அடிச்சிகிட்டு இருந்தீங்க.

    சங்கீதா : அங்க பாரு பந்தி போட்டாச்சுன்னோன முதல் ஆளா போயி உட்கார்ந்திருக்கறத . . . . . .

  23. அய்யனார் Says:

    நந்தா

    இந்த பின்னூட்ட கொலவெறி படைங்க கலக்கியிருக்காங்களே :) )

    இதில் கிடேசன் பார்க் சிங்கங்கள் உள்ளதா

  24. நந்தா Says:

    வாங்க அய்யனார். இதில் கிடேசன் பார்க் ஆளுங்க எல்லாம் யாரும் கிடையாது……

    வெங்கட்ராமரே. இதுவும் நல்லாதான் இருக்கு. உங்களுக்குமா இந்த கொலை வெறி.

  25. தம்பி Says:

    //வாங்க அய்யனார். இதில் கிடேசன் பார்க் ஆளுங்க எல்லாம் யாரும் கிடையாது……//

    அதெப்படி உறுதியா தெரியும்?

  26. நந்தா Says:

    எல்லாம் நம்ம ஆளுங்க கைவண்ணம்தான்…….

  27. துர்கா|†hµrgåh Says:

    //நந்தா said…
    எல்லாம் நம்ம ஆளுங்க கைவண்ணம்தான்…….
    ///

    உங்க ஆளுங்களா?இருக்காதே…உங்களுக்குதான் கும்மி அடிச்ச அது எல்லாம் ஒரு பொழப்பான்னு கேட்ப்பீங்களே…
    இந்த அனானி பின்னோட்டங்களுக்கு பின் மர்மம் இருக்கின்றது

    நீங்க நந்தா தானே?இல்லை போலி நந்தாவா?

    பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்லுவாங்க.ஒரு வேலை மொக்கை பதிவு போடுற எங்க கூட சேர்ந்து நீங்களும் ‘மணம்’ வீச ஆரம்பிச்சுடீங்களோ?

  28. பின்னூட்ட கன்சல்டன்ஸி Says:

    இதுவரை எங்கள் ஆட்கள் கலந்துகொல்லவில்லை என்பதைத் தெரியப் படுத்திக் கொல்கிறேன்!

    மேலாளர்,
    பின்னூட்டக் கன்சல்டன்ஸி பி.லிட்,
    சென்னை.
    (An ISO Certified And Authorised AMK Service Provider)

  29. நாமக்கல் சிபி Says:

    அடப் பாவி!
    எனக்கு ரொம்பப் பிடிச்ச படமய்யா!

    இதை வெச்சே காமெடி பண்ணீட்டீங்களே!

    :(

  30. நந்தா Says:

    வாங்க சிபி… முத முதல்ல வந்திருக்கீங்க. நான் கூட ஒரு வயசுல வெறியா பாத்தவன்தான்.. என்ன பண்றது

  31. நாகேஷ் Says:

    கமெண்ட் போட்டா உடனே பப்ளீஷ் பண்ணுறாரான்னு பார்த்தேன்!

    பண்ணலை!

  32. நந்தா Says:

    நாகேஷ் பண்ணிட்டேன். போதுமா….

  33. சுகுமாரி Says:

    இவரு பதிவுன்னு எழுதினா நல்லா வாசிப்பார்!

  34. நாமக்கல் சிபி Says:

    //நான் கூட ஒரு வயசுல வெறியா பாத்தவன்தான்..//

    ஒரு வயசுலயே இந்தப் படத்தைப் பார்த்தீங்களா?

    அதுவும் வெறியோட பார்த்தீங்களா?

  35. கதா Says:

    எடுத்தவுடனே ஒரு குளோஷ் அப் ஷாட்!

    இந்தக் கதை ஏன் சிபிக்கு பிடிக்குதுன்னா..

    வேணாம் அவரோட கதை ஒண்ணு இதுல இருக்கு!

  36. நந்தா Says:

    //வேணாம் அவரோட கதை ஒண்ணு இதுல இருக்கு! //

    அனேகமா அவருதான் சேத்து வெச்ச தியாகியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.

    //ஒரு வயசுலயே இந்தப் படத்தைப் பார்த்தீங்களா?

    அதுவும் வெறியோட பார்த்தீங்களா? //

    ஆமா நான் அஞ்சு அரவிந்தோட தீவிர ரசிகன். அதான் இந்த வெறி.

  37. வரலட்சுமி Says:

    அதான் பப்ளிஷ் பண்ணிட்டாரல்ல! உள்ள வாங்க!

    அப்படியே நியூஸ் பேப்பர் காரன் வரானான்னு பாருங்க!

  38. நம்பியார் Says:

    உன் பேரை எழுத்துக் கூட்டி வாசிக்கவே ஒரு வாரம் ஆகும்!

    நந்தாவோட பதிவு படிக்குற அளவுக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் ஆயிடுச்சா!

  39. நந்தா Says:

    //உன் பேரை எழுத்துக் கூட்டி வாசிக்கவே ஒரு வாரம் ஆகும்!

    நந்தாவோட பதிவு படிக்குற அளவுக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் ஆயிடுச்சா!//

    என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே….

  40. ஃபிகரோட அப்பா Says:

    //என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே…. //

    ச்சேச்சே!

    பஸ்ஸில் வந்த ஃபிகரோட அப்பா

  41. சங்கீதா Says:

    என் ஒரிஜினல் பேரு சங்கீதா இல்லை!

    மேரின்னு முடியும்!

    என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

  42. நந்தா Says:

    உன்னி மேரியா????

    தெரியலைப்பா….தெரியலை

  43. நிர்மலா மேரி Says:

    பேரை மறந்துட்டியா பேமானி!

    கானா பாட்டு ஆராய்ச்சி பண்ணப் போனப்போ நம்ம வீட்டு நாய் குட்டி போட்டப்போ கூட என்ன பேரு வெக்கலாம்னு கேட்டு லெட்டர் போட்டேனே!

    வெள்ளியங்கிரி அங்கிள் கூட வாந்தின்னு பேரு வைக்கலாம்னு சொன்னாரே!

  44. நந்தா Says:

    நீ இப்படி பேசுவன்னு அப்பவே தெரிஞ்சிருந்தா உனக்கு வாந்தின்னே பேரு வெச்சிருந்திருக்கலாம்

  45. ஒளிந்து பார்த்தவன் Says:

    அடப் பாவி! நீதான் இந்தப் பதிவைப் போட்டியா!

    இரு இரு போய் தாமஸ்கிட்டயும், மோஸஸ்கிட்டயும் சொல்றேன்!

  46. ஜானகி Says:

    நான்தான் நிர்மலா மேரியோட அம்மா!

    அவ பேரு நிர்மலா மேரி இல்லை!

    பிரியதர்ஷிணி!

  47. நந்தா Says:

    //அவ பேரு நிர்மலா மேரி இல்லை!

    பிரியதர்ஷிணி!//

    அனானி, பரவாயில்லையே. படத்துல அந்த புள்ளை பேரு ப்ரியதர்ஷினின்னு கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்க.

    மொக்கை படத்தை விடாம உக்காந்து பாத்திருக்க போல

  48. ஜானகி Says:

    //அனானி, பரவாயில்லையே. படத்துல அந்த புள்ளை பேரு ப்ரியதர்ஷினின்னு கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்க//

    என் பேரு அனானி இல்லை!

    ஜானகி!

    ஏன்யா! என் புள்ளை பேரு எனக்குத் தெரியாதா?

  49. முரளி Says:

    //மொக்கை படத்தை விடாம உக்காந்து பாத்திருக்க போல
    //

    இது படமா! இல்லை படமான்னு கேக்குறேன்!

    இது ஒரு காவியம்!

    (மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவரணக் கிளி பறக்குது)

  50. நாமக்கல் சிபி Says:

    க்ளைமாக்ஸ் டயலாக் எல்லாம் சூப்பரா ஞாபகம் வெச்சி எழுதி இருக்கீங்க!

    பிரிண்ட் போட்டு வெச்சிக்கப் போறேன்!

  51. நிர்மலா மேரி Says:

    யாராவது குரங்கைக் கூட்டிகிட்டு வாக்கிங் போவாங்களா?

  52. நந்தா Says:

    //க்ளைமாக்ஸ் டயலாக் எல்லாம் சூப்பரா ஞாபகம் வெச்சி எழுதி இருக்கீங்க!

    பிரிண்ட் போட்டு வெச்சிக்கப் போறேன்! //

    அய்யோ சிபி அவ்ளோவ் தீவிர ரசிகரா நீங்க இந்த படத்துக்கு. என்னமோ போங்க. ஆனா அந்த பாட்டு அருமையான பாட்டு.

    படமும் நல்லாதான் இருக்கும். ஒரு சில டயலாக்ஸ் தான் இப்போ காமெடியா போயிடுச்சு.

  53. நந்தா Says:

    //யாராவது குரங்கைக் கூட்டிகிட்டு வாக்கிங் போவாங்களா? //

    யக்கா மேரிக்கா. எனக்கு மிச்சமா உக்காந்து பாத்திருப்பீங்க போல இருக்கு.

  54. நிர்மலா மேரி Says:

    கடைக்கார்ரே!

    இவருக்கு பீடி குடுங்க!

  55. வெள்ளியங்கிரி மாமா Says:

    உனக்கு வீடு வேணும்னா என் பாட்டைக் கேட்டுத்தான் ஆகணும்.

    “பாட்டும் நானெ பாவமும் நானே..!
    பாடும் உன்னை நான் பாட வைப்பேனே….”

  56. போஸ்ட் மேன் Says:

    ஆஹா! 8 மணிக்கு இந்த வெள்ளியங்கிரி மாமா பாட ஆரம்பிச்சிடுவாரே

    எல்லாரும் எஸ்கேப் ஆயிடுங்க!

  57. விஜய் Says:

    ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ஜவுளி வாங்குனதுலயே ஆயிரம் ரூபா லாபம்னா, காலம் பூரா ஒண்ணா இருந்தீங்கன்னா எவ்வளவு லாபம்!

    யோசிச்சுப் பாருங்க!

  58. கீதா சாம்பசிவம் Says:

    எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :) ))))))))

  59. நந்தா Says:

    இந்த டயலாக்குக்கே இப்படிங்கரீங்களே. இன்னொன்னு இருக்கு Ultimate.

    “பொறக்கும் போதே எந்த குழந்தையும் இந்த மதத்துலதான் பிறக்கணும்னு அடம் பிடிச்சு பொறக்கறதில்லை.

    அதே மாதிரிதான் சாமியும். இந்த பக்கம் பார்த்தா கிருஷ்ணர் மாடு மேய்ச்சிட்டிருந்திருக்காரு. அந்த பக்கம் பார்த்தா இயேசு ஆடு மேய்ச்சிட்டிருந்திருக்காரு. இவரு என்னமோ கான்வெந்த் ஸ்கூல்ல படிச்ச மாதிரியும், அவரு என்னமோ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்ச மாதிரியும் ஆளாளுக்கு சண்டை போட்டுக்கறீங்க.”

    டொடொடொய்ங்…..
    ஜெய்கணேஷ் முகத்தை உயர்த்தறார்.

    டொடொடொய்ங்…..
    மலேசியா வாசுதேவன் முகத்தை உயர்த்தறார்.

  60. நாமக்கல் சிபி Says:

    படத்தை வரிக்கு வரி மனப்பாடமா வெச்சிருக்கீங்களே நந்தா!

    சூப்பர்!

  61. நந்தா Says:

    நன்றி சிபி. என்னதான் படத்தை ஓட்டினாலும் நானும் வெறியா பார்த்தவன்தான். அதான் இப்படி.

  62. மாயன் Says:

    எட்டு விளையாட்டு தெரியும்ல? வாங்க வந்து எட்டுபோடுங்க… லைசென்ஸ் கிடைக்குதா பாப்போம்…

  63. மாயன் Says:

    எட்டு விளையாட்டுக்கு ரெடியா? என்னோட லேட்டஸ்ட் பதிவை பாருங்க…உங்களை அழைச்சிருக்கேன்..


மறுமொழி இடுக